ஆண்கள் இந்த உணவை சாப்பிட்டால், பின் அந்த பிரச்சனைகள் அனைத்தும் வருமாம்!! தெரிந்து கொள்ளுங்கள்!!

0
197

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ விரும்பும் போது, ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் உண்ணும் உணவுகள் மிக முக்கிய பங்காற்றுகின்றது. இருப்பினும், குறிப்பிட்ட சில உணவுகளை ஆண்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இந்த உணவுகள் அவனது ஆண்களின் ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கக்கூடியது. குறிப்பாக டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதித்து, விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும், ஆரோக்கியத்தை குறைக்கும்.

ஆண்கள் சாப்பிடக்கூடாத சில முக்கிய உணவுகள் யாதெனில்,
சோயா பொருட்கள்:

சோயா பொருட்களில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளது. இந்த காரணத்தால், இது தாவரங்களிலிருந்து பெறப்படும் ஈஸ்ட்ரோஜன் போன்ற பொருளாகும். அதிக அளவிலான சோயா பொருட்களை உட்கொண்டால் அது உடல் ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தும். ஒரு கருவுறுதல் கிளினிக்கில் 99 ஆண்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, சோயா பொருட்களை உட்கொள்வது ஆண்களின் விந்து அளவை குறைக்கும். மேலும், டெஸ்டோஸ்டிரோன் அளவுகளில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.

பிரெஞ்சு பிரைஸ் :

சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பிரெஞ்ச் பிரைஸ் டிரான்ஸ் கொழுப்பு கொண்ட ஒரு உணவுப் பொருள். இந்த ட்ரான்ஸ் கொழுப்புகள் இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாக உள்ளது. உருளைக்கிழங்கில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இன்சுலின் அளவு அதிகரிக்க இது வழிவகுக்கிறது. இதன் காரணமாக உங்கள் உடல் ஆரோக்கியமானது மிகவும் பாதிக்கப்படுகிறது. பொதுவாக உயர் வெப்பநிலையில் உருவாகிறது. 2011ஆம் ஆண்டு ஆய்வில் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனால் விந்தணு பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்று ஆய்வு கூறியுள்ளது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் :

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பேகன் சலைன் எடுத்துக்காட்டுகளாகும். இதனை உட்கொள்ளும் போது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதுடன், மேலும் பதப்படுத்த இறைச்சிகளை உட்கொள்வது ஆண்களின் உடல் நலத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதனை தவிர்ப்பது மிக நல்லது.

பாப்கான் :

பாப்கான் சாப்பிட்டுக்கொண்டே திரைப்படம் பார்க்க நன்றாகத்தான் இருக்கும். இருந்தாலும், பெரும் அளவில் கொழுப்புக்கள் மற்றும் சோடியம் கலந்துள்ள காரணத்தினால் அதனை செயற்கை சுவையூட்டிகள் என்றே கூறுவர். ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிக கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் :

இதனை சாப்பிடுவதை ஆண்கள் தவிர்ப்பது மிக நல்லது. இளம் ஆண்கள் ஆய்வின்படி 22 வயதுக்குட்பட்ட 189 ஆண்களில் விந்து மற்றும் உணவு பற்றிய பகுப்பாய்வு நடத்தப்பட்டது. அதில் கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் விந்தணுக்களின் வீரியத்தை குறைப்பதோடு, அவர்களுக்கு புற்றுநோய் காரணமாக இருந்தது.

Previous articleகலவரம் தீவிரம் அடைவதால் ராணுவம் குவிப்பு!
Next article12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ‘ஜைகோவ் டி’ தடுப்பூசி!! எப்போது தெரியுமா?!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here