12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ‘ஜைகோவ் டி’ தடுப்பூசி!! எப்போது தெரியுமா?!

0
136

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி பெங்களூரை சேர்ந்த ஜைடிஸ் கெடில் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ‘ஜைகோவ் டி’ மருந்தை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த கோரி இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையமானது கோரியுள்ளது. இந்த நிலையில், இதனை குறித்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த இடத்தில், மூத்த அதிகாரிகள் ‘ஜைகோவ் டி’ மருந்து முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நல்ல பலனை காட்டியுள்ளது.

மேலும், தற்போது மூன்றாம் கட்டத் பரிசோதனையானது நடைபெற்று வருகிறது. இதில் 28,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று கூறியுள்ளார்கள். மூன்று கட்ட கிளினிகல் பரிசோதனையிலும் சிறந்த பலன்களை அளித்தால் இந்தத் தடுப்பூசி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தின் ‘ஜைகோவ் டி’ தடுப்பூசி முதல் டோஸ் கொண்டது. முதல் தடுப்பூசி எடுத்துக் கொண்டபின் இருபத்தி எட்டாவது நாளில், இரண்டாவது டோஸ் மற்றும் 56 வது நாளில் மூன்றாவது டோஸ் செலுத்தவேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு அனைத்து நாடுகளிலும் நிகழ்வதால் இந்த திட்டத்தை பயன்படுத்தி தோய்வில்லாமல் அனைவருக்கும் வழங்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் 4 முதல் 12 வாரங்களுக்கு தொடர்ந்து இருக்கும் நிலை மிக அதிகரித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதயம் நரம்பு, சுவாசம் தசைகள் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, நீண்டகால அதிர்ச்சியையும் நோயாளிகள் அனுபவிக்கின்றனர் என்று டில்லி மருத்துவமனையின் மூத்த டாக்டர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் வயதினர் மற்றும் இளைஞர்களுக்கு வர இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். ஆஸ்துமா போன்ற சுவாச பரவிக் கொண்டிருக்கும் நீண்டகால பாதிப்பு ஏற்படுவது உறுதியாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .எனவே இந்த தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.