இந்த திட்டத்தில் அனைவரும் உடனே சேருங்க!! மாதம் 3000 கிடைக்கும்.,மத்திய அரசின் பிரமாதமான திட்டம்!!

0
242

மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ரூபாய் பென்ஷன் அனைவரையும் வாங்க முடியும். மேலும், அதனை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.

உங்களது வயதான காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் தற்போது நீங்கள் உங்களின் முதிர்வு காலத்திற்கு இப்பொழுது சேமிக்க முடியும். அப்போதுதான் வயதான காலத்தில் எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வாழ முடியும்.

பென்ஷன் எனும் பெயரில் ஒரு நிலையான தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு வந்தால் அது உங்களுக்கு ஓய்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மத்திய அரசு இது போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்த்ன் யோஜனா திட்டம் என்ற திட்டத்தின் மூலம் ஓய்வு காலத்தில் பென்ஷன் பெற முடியும். தற்போது சேமித்தால் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் நீங்கள் சேமித்து வைத்தால் உங்கள் கடைசி காலத்தில் ஒவ்வொரு மாதம் 3000 ரூபாய் பென்ஷன் கிடைக்கும்.

மேலும், அமைப்புசாரா துறையில் சேர்ந்து ஊழியர்களுக்கு சிறந்த பலனை அளிக்கின்றது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இந்த வட்டத்தின் கீழ் பயன் பெற்றுக் கொள்ளலாம். அரசு பொது சேவை மையங்களில் இந்தத் திட்டத்தை தொடங்க முடியும். மேலும் ஆதாரங்கள் தேவை.

தொடங்கியபின் கார்டு ஒன்று வழங்கப்படும். அதை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 55 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 ரூபாய் வரை சேமிக்கலாம். 60 வயதை தாண்டியவுடன் உங்களுக்கு இந்த பென்ஷன் கிடைக்கும். 42 வருடங்களுக்கு இந்தத் திட்டத்தில் சேமிக்க வேண்டும். அதற்கு உங்களிடம் முதலீடு 27 ஆயிரத்து 720 இருக்கும்.

நீங்கள் விரும்பினால் மாதாந்திர பென்ஷனுக்கு பதிலாக வருடாந்திர பென்ஷனை பெற்றுக்கொள்ளமுடியும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செயல்பட்டு உங்களது ஓய்வு காலத்தில் நீங்களே உங்களை பார்த்துக்கொள்ள உங்களுக்கான பென்ஷன் உதவும்.

Previous articleமாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்!
Next articleஓஹோ., இதற்காக தானா இந்த குறியீடு ‘சொல்லவே இல்ல’!! மிக முக்கியமான தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here