கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
78

கொரோனா தடுப்பூசி போடாத பணியாளர்களுக்கு சம்பளம் கிடையாது!! வெளியான அதிரடி அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தடுப்பூசி போடாமல் தவிர்க்கும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்று பாகிஸ்தான் நாட்டு ரயில்வே துறை அறிவித்து இருக்கின்றது.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகம் முழுவதும் தற்போது வரையிலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இதுவே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி என்றும் ஒவ்வொரு நாடும் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அத்துடன் பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் தவிர்த்து வரும் ரயில்வே பணியாளர்களுக்கு அந்த நாட்டு ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது.

இந்த அறிவிப்பின்படி, வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத ரயில்வே துறை பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும் தடுப்பூசி போட விரும்புபவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத அனைத்து ரயில்வே பணியாளர்களுக்கும் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்ற காரணத்தால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலரும் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

author avatar
Jayachithra