மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல முயற்சிக்கிறதா திமுக?

0
76

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதற்கான விழா ஏற்பாடுகளை கவனித்து வருகிறது.

இதற்கு நடுவிலே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 19ஆம் தேதி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்து சென்னை மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை அமைக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு பெற்றதை அடுத்து அந்த விழாவிற்கு தலைமை தாங்கி மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பதற்காக அழைப்பு விடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த கட்சியை சார்ந்தவர்கள் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ்களை கொடுத்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் திமுகவின் பரம எதிரியாக பார்க்கப்படும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களை நேரில் சந்தித்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி அவர்கள் தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படத்திறப்பு விழா உள்ளிட்ட அழைப்பிதழை வழங்கி இருக்கின்றார்.

ஒருபுறம் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்ற பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. அதுவும் தனிப்பெரும்பான்மையுடன் மறுபுறம் திமுக பாஜகவை விமர்சனம் செய்து வருகிறது. இதற்கிடையில் திமுக சார்பாக கொண்டாடப்படும் விழாவிற்கு அந்த கட்சி தலைவரையே நேரில் சென்று அழைக்கிறது என்றால் இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறார்கள்.

அத்தோடு மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருப்பதால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் நாம் எதையும் செய்ய இயலாது என்ற காரணத்திற்காக, அந்த கட்சியிடம் இணக்கமாக செல்வதற்கு தமிழக அரசு முயற்சி செய்கிறதா என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.