சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

Photo of author

By Vijay

சென்னையில் காலையிலேயே பரவலாக பெய்துவரும் கனமழை.!!

Vijay

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக லேசான முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே காலை முதல் லேசான முதல் கன மழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை விட்டுவிட்டு பரவலாக தொடர்ந்து பெய்து வருகிறது.

சென்னையில் குரோம்பேட்டை, தாம்பரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், வடபழனி, ஆவடி, கோவிலம்பாக்கம், நீலங்கரை, ராயப்பேட்டை நுங்கம்பாக்கம் கோயம்பேடு வேளச்சேரி திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தற்போது, நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், இன்று காலை 8 மணி நிலவரப்படி அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.