வந்துட்டான்யா வந்துட்டான்யா.!! நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!!

0
247

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி பட பிரச்சினையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது அதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

தற்போது நடிகர் வடிவேலுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்

லைகா தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் என்ற திரைப்படத்தில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்படம் பற்றி இயக்குனர் சுராஜ் கடந்த இரண்டு வருடங்களாக பேசிவருகிறார். ஆனால், இந்த படத்தின் தலைப்பை அவர் முறையாக பதிவு செய்யவில்லை.

அதே தலைப்பில் நடிகர் சதீஷை வைத்து ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனமும் ‘நாய் சேகர்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது. மேலும், இந்த தலைப்பை முறையாக அவர்கள் பதிவு செய்துள்ளனர். எனவே நடிகர் வடிவேலு கோரிக்கை வைத்தும் இந்த தலைப்பு அவருக்கு கிடைக்கவில்லை அதோடு நாய் சேகர் படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு. இதில், இதுதான் ஒரிஜினல் என சொல்வது போல ஒரிஜினல் என போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Previous articleபெற்ற மகளின் உடல் முழுவதும் தாய் செய்த காரியம்! ஆத்திரத்தின் உச்ச கட்ட நிலை!
Next articleஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் 2 போட்டிகள்.!! MI VS SRH போட்டியில் மும்பை பேட்டிங்.!! RCB VS DC போட்டியில் பெங்களூ பௌலிங்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here