ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் 2 போட்டிகள்.!! MI VS SRH போட்டியில் மும்பை பேட்டிங்.!! RCB VS DC போட்டியில் பெங்களூ பௌலிங்.!!

0
125

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரே நேரத்தில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ்அணி,ஹைதராபாத் அணியையும், பெங்களூர் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன. இந்த இரண்டு போட்டிகளும் இன்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.இதில் இதில் மும்பை இந்தியன்ஸ், அணி ஹைதராபாதுடன் மோதும் போட்டியில் மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பெங்களூர் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதும் போட்டியில் பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது அக்டோபர் 15-ம் தேதியுடன் ஐபிஎல் 14 சீசன் முடிவடைய உள்ள நிலையில் இன்றையதினம் கடைசி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

தற்போதுள்ள புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிடல், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய மூன்று அணிகள் தகுதி பெற்று விட்ட நிலையில் இன்னும் ஒரு அணி எந்த அணி என்பது இன்று தெரியவரும்.

இந்நிலையில் இன்றுடன் ஐபிஎல் 2021 லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது. அதேசமயம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி, 55 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் ஹைதராபாத் அணி, மும்பை அணியையும் , 56வதுலீக் போட்டி பெங்களூரு அணி, டெல்லி அணியையும் எதிகொள்கின்றன .
இந்த இரு போட்டிகளும் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை VS ஹைதராபாத்  ( போட்டி -55 )

ஹைதராபாத் அணிவீரர்கள் ;ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, மணீஷ் பாண்டே (கே ), பிரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (விகீ ), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், முகமது நபி, உம்ரான் மாலிக், சித்தார்த் கவுல்

மும்பை அணிவீரர்கள் ; ரோஹித் சர்மா (கே ), இஷான் கிஷன் (விகீ ), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கீரான் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ஜஸ்பிரித் பும்ரா, பியூஷ் சாவ்லா, ட்ரெண்ட் போல்ட்

பெங்களூர் VS டெல்லி ( போட்டி -56 )

பெங்களூர் அணிவீரர்கள்: .விராட் கோலி (கே ), படிக்கல், ஸ்ரீகர் பாரத் (விகீ ), டேனியல் கிறிஸ்டியன், க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், ஷாபாஸ் அகமது, ஹர்ஷல் பட்டேல், ஜார்ஜ் கார்டன், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்

டெல்லி அணிவீரர்கள்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (w/c), ரிபால் படேல், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அன்ரிச் நார்ட்ஜே