சபரிமலையில் இருக்கும் பம்பையில் நீராட தடை!. கேரளா அமைச்சர் ராதாகிருஷ்ணன் உத்தரவு!

0
115

திருவனந்தபுரத்தில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் அங்கு உள்ள பம்பை நதியில் நீராட அனுமதி இல்லை’ என, தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரபலமாக இருக்கும் சபரிமலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு பூசைகளின் காலமானது துவங்கியுள்ளது.

இந்த பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.இதற்கு தலைமை வகித்த தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியது என்னவென்றால் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளின்போது நாட்கள்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இதற்கான ‘நிகழ்நிலை’ முன்பதிவு நடக்கிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முன்பதிவு செய்துள்ளனர்.இந்த ஆண்டும் பெரிய பாதை வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு வரும் பக்தர்கள், பம்பையில் குளிக்கவோ, கோவில் சன்னிதானத்தில் தங்கவோ அனுமதி இல்லை என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்து சென்றும், இடைவெளியை பின்பற்றினாலும் தான் கொரோனாவிலுருந்து பாதுக்காப்பாக இருக்க முடியும்.

Previous articleதமிழக அரசின் அனுமதிக்கு ஆப்பு வைத்த தனி ஒருவன்?
Next articleதமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!