தமிழகத்தின் இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.!!

0
72

தமிழகத்தின் கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் 2-ம் தேதி வரை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மற்றும் 4ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மன்னர் வளைகுடா மற்றும் இலங்கை கடற் பகுதியை தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கேரள கடலோர பகுதிகள் லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் 3ஆம் தேதி வரை சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் 4-ம் தேதி அன்று லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும். எனவே இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.