நாடு முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. அதன் காரணமாக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், இனி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல், கலை மற்றும் அறிவியல், தொழிற்கல்வி படிப்பு தேர்வுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் எப்படி நடந்ததோ அது போன்றே நடைபெறும் என்று கூறப்படுகிறது.