தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு

0
213
#SuriyaHatesVanniyars
#SuriyaHatesVanniyars

தேசிய அளவில் பேசப்படும் ஜெய் பீம் பட பிரச்சனை! விளாசிய பாமகவினர் அச்சத்தில் சூர்யா தரப்பு

ஜெய் பீம் திரைப்பட விவகாரமானது நாளுக்கு நாள் விவாதத்தை அதிகரித்து கொண்டே செல்கிறது.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியானது ஜெய் பீம் திரைப்படம்.இப்படத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இணைந்து நடத்தும் நிறுவனம் தயாரித்துள்ளது.பழங்குடி இன மக்கள் படும் துயரங்களை இப்படத்தில் காட்டியுள்ளதால் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் இது உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் என்று திரைத்துறையினரும் ஊடகங்களும் பாராட்டிய நிலையில் இதில் சம்பந்தமில்லாமல் வன்னிய மக்களை தவறாக சித்தரித்து காட்டியுள்ளதாக விமர்சனம் எழுந்தது.அதாவது இப்படத்தில் கொடூர குற்றவாளியாக வரும் காவல்துறை அதிகாரியின் உண்மையான பெயர் அந்தோணி சாமி ஆனால் படத்தில் குருமூர்த்தி என்று வைக்கபட்டிருக்கும்.

இந்த பெயரானது மறைந்த வன்னியர் சங்க தலைவர் மாவீரன் என்றழைக்கப்படும் காடுவெட்டி குரு அவர்களை குறிப்பிடுவதாக வன்னியர் சங்கமும்,அந்த சமூக இளைஞர்களும் குற்றம் சாட்டினர்.குருமூர்த்தி என்பது பொதுவான பெயராக இருந்தாலும் அவர் வன்னியர் என்பதை உறுதிசெய்யும் வகையில் அவரது வீட்டில் வன்னியர் சங்க காலண்டர் மாட்டப்பட்டுள்ளதையும் அவர்கள் ஆதாரமாக காட்டியிருந்தனர்.இதன் பிறகு படத்தின் அந்த காட்சியிலிருந்து அக்னி கலச காலண்டர் நீக்கப்பட்டு லட்சுமி படம் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உண்மையை கொண்டுவர பாடுபட்ட அந்த பகுதி வன்னிய மக்களை எதிராளியாக சித்தரித்தது ஏன் என பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.இதற்கு நடிகர் சூர்யா சரியான பதிலை அளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் தலைக்கனத்துடன் ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.இது ஏற்கனவே கொந்தளிப்பில் இருந்த வன்னிய இளைஞர்கள் மத்தியில் மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் நடிகர் சூர்யாவுக்கு கருத்து சுதந்திரம் உள்ளதாக திரைத்துறையினரும்,தமிழக ஊடகங்களும் பேசி வந்தனர்.அதே நேரத்தில் நடிகர் சூர்யா வன்னிய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,இல்லையென்றால் 5 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வாறு கிடைக்கும் இந்த இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட ராஜாகண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு வழங்கப்படும் என்றும் பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவரும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் #WeStandWithSurya என்ற ஹேஷ்டேக்கில் தங்களுடைய ஆதரவு கருத்துக்களை தெரிவித்து டிரென்ட் செய்தனர்.இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும்,நடிகர் சூர்யாவை பணிய வைக்க வேண்டும் என்பதற்காகவும் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் #SuriyaHatesVanniyars மற்றும் #AmazonStopHate என்ற ஹேஷ்டேக்குகளில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து தேசிய டிரென்ட் செய்து வருகின்றனர்.

 

ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் தேசிய அளவில் எடுத்து செல்லப்பட்டுள்ளதால் மற்ற மாநிலத்தில் வாழும் ஷத்ரிய சமூகத்தை சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.இதனால் ஜெய் பீம் பட விவகாரம் தேசிய அளவிலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது அப்படத்தில் நடித்தவரும் தயாரித்தவருமான சூர்யாவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமழை வெள்ள பாதிப்பு! இன்று தமிழகம் வருகிறது மத்திய குழு!
Next articleநீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!