நீடிக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

0
90

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டை ஒட்டியிருக்கக்கூடிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது இதன் காரணமாக, சென்னையில் ஒரு சில பகுதிகளிலும் மற்றும் புறநகர் பகுதிகளிலும், இன்னும் மழை நீர் வடியாமல் அப்படியே நிற்கின்றது.

அவற்றை வெளியேற்றும் பணிகள் இன்று வரையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க கொசஸ்தலை ஆற்றில் உண்டான வெள்ளப்பெருக்கின் காரணமாக, சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கொண்டிருக்கிறது.

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிவரும் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி தமிழக கடலோர பகுதி வரை நீடிப்பதால் கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு கரூர், கடலூர், திருச்சி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் லேசான மழை நிலவரம் இன்றைய தினம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. நாளை தனம் டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெயர்கான வாய்ப்பிருக்கிறது.

24ஆம் தேதி மற்றும் 25 உள்ளிட்ட தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக,   ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மற்ற மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதிகபட்சமாக 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக நந்தியார், கொசஸ்தலை, அலுவலர் பேட்டையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. வேப்பந்தட்டை அணை, வானூர், காட்பாடியில் தலா 8 சென்டி மீட்டர் மழையும், லால்குடி, செந்துறை, நாவலூர், கொட்டப்பட்டு, பெரிய அணைக்கட்டு, உள்ளிட்ட பகுதிகளில் 7️ செண்டி மீட்டர் மழையும், சேத்தியாதோப்பு, மஞ்சளாறு, வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் தலா 6 சென்டி மீட்டர் மழையும், திருக்காட்டுப்பள்ளி, ஆலங்காயம், பள்ளிப்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டி மீட்டர் மழையும், திருவையாறு, மணப்பாறை, வடபுதுப்பட்டி, மேல்ஆலத்தூர், பண்ருட்டி, நாற்றம்பள்ளி, வலங்கைமான், செஞ்சி, செங்கம், குடியாத்தம், பரங்கிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில், 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.