சென்னையில் இடைவிடாமல் பெய்த கனமழை! கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ஒரு சில வாரங்களுக்கு முன்பு இடைவிடாமல் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை எதுவும் இல்லாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தனர்.இந்நிலையில் நேற்று சென்னையில் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் திடீரென கன மழை பெய்ய ஆரம்பித்தது.
குறிப்பாக முன்பு இல்லாதாக வகையில் குறைந்த நேர இடைவேளையில் பதிவான மிகவும் அதிகமான மழைப்பொழிவாக இதைக் கூறுகின்றனர்.வானிலை மையமும் இந்த திடீர் மழை குறித்து கணிக்க தவறி விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.நேற்று பிற்பகலில் ஆரம்பித்து ஏறக்குறைய 10 மணி நேரத்திற்கு மேல் பெய்த இந்த [பேய் மழையால் சென்னையில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சியளித்தது.
இதனால் சாலையில் செல்வோரும்,திடீர் பயணமாக வெளியில் சென்றவர்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.குறிப்பாக இந்த குறுகிய கால இடைவெளியில் சென்னையில் பல இடங்களில் 20 சதவீதத்திற்கு மேல் மழை பதிவாகியுள்ளது.இது பருவநிலை மாறுபாட்டின் விளைவு என பலரும் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த 4 மாவட்டங்களில் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை என்றும்அவர் அறிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய தேவை சார்ந்த அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எதிர்பாராத மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்..