பாமகவின் கோரிக்கைக்கு தமிழக அரசு செவிசாய்க்குமா? 10 11 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை?
கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தவுடன் பாதிப்பு குறைந்துவிடும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தொடரானது சற்றும் குறையாமல் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பரவி வருகிறது. கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் போது இந்தியா பெருமளவு பாதிப்பை சந்தித்தது. அது மட்டுமின்றி தேவையான மருத்துவ வசதிகள் இன்றியும் ,ஆக்சிஜன் இன்றியும் மக்கள் பெருமளவு சிரமப்பட்டனர். இதனால் பல உயிர்களை இழக்க நேரிட்டது.
அதனைத் தொடர்ந்து தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் ஒமைக்ரான் வடிவில் தொற்றானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மாநில அரசுகள் அனைத்தும் ,தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் கோவா ,ஹரியானா ,டெல்லி போன்ற மாநில அரசுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது தமிழகத்திலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விடுப்பு அளித்துள்ளனர். மேலும் கல்லூரிகளுக்கும் விடுப்பு அளித்துள்ளனர். ஆனால் 10 11 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கவில்லை. இவர்களுக்கு பொது தேர்வு நடக்க இருப்பதால் இந்த மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதனால் பாமக தலைவர் ராமதாஸ் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்பொழுது நேரடி வகுப்பிற்கு வரும் 10 11 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுப்பு அளிக்க வேண்டும். அது மட்டுமின்றி வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூட்டம் கூடும் பெரிய கடைகள் மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தற்பொழுது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தாலும், ஓர் புறம் தொற்று பாதிக்க அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் தடுப்பூசி செலுத்திய பெரியவர்களை தொற்றால் பாதிக்கப்படும் நிலையில் மாணவர்களுக்கும் அதே நிலைதான். அதனால் பாமக தலைவர் ராமதாஸ் அவர்கள் 10 11 12 பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து விடுப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.