10 11 12ஆம் வகுப்பு பொது தேர்வு பற்றிய புதிய தகவல்! தேர்வுத் துறையின் அதிரடி உத்தரவு!
கொரோனா தொற்று இப்பொழுது அனைத்து நாடுகளையும் பாதிக்க ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்து மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாவே போனது. முதல் அலையின் போது தொற்று பாதிப்பானது அதிகளவில் காணப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. ஆன்லைன் முறையில் பாடங்கள் தொடங்கினர். ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டாலும் அது அனைத்து மாணவர்களாலும் பயில முடியவில்லை. பல பள்ளி மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாமலே இருந்தது.
அதனால் அவர்களால் பாடங்களை கற்பிக்க முடியவில்லை. அதற்கு மாற்றாக தமிழக அரசு தொலைக்காட்சிகளில் பாடங்களை எடுக்க முயன்றது. எந்த ஒரு முயற்சியும் சரிவர கைகொடுக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் இரண்டு ஆண்டுகாலம் தேர்வு இன்றியே 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி பெற செய்தனர். இம்முறை அவ்வாறு செய்ய இயலாது என முன்கூட்டியே தெரிவித்து வந்தனர். இவ்வாறு இருக்கையில் இம்முறையும் மூன்றாவது அலை தீவிரம் காட்டி வந்தது. அச்சமயத்தில் பொதுத்தேர்வு நடைபெறாது என்று பலர் கூறி வந்தனர்.
வதந்திகளுக்கு எதிராக பொதுத் தேர்வு கால அட்டவணை வெளிவந்தது. அடுத்த மாதம் 5-ஆம் தேதி முதல் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. பொது தேர்வுக்கு முன் திருப்புதல் தேர்வு நடை பெறுவது வழக்கம். அந்தத் திருப்புதல் தேர்வின் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மாற்று வினாத்தாள் தயார் செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது. இது பொது தேர்வில் நடக்காமல் இருக்க பல கட்டுப்பாடுகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் 10 11 12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் வைக்கும் அறைகளில் கட்டாயம் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி வினாத்தாள்கள் வைக்கும் அறைகளில் இரண்டு போட்டுக் கொண்டு பூட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதைப்போல தேர்வு அறைகளில் கண்காணிப்பு அவர் சம்பந்தப்பட்ட பள்ளிகளிலிருந்து இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு பணியில் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தேவைப்பட்டால் நியமித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.