இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

0
262
A bicycle today, a laptop tomorrow? Good news for students!
A bicycle today, a laptop tomorrow? Good news for students!

இன்று மிதிவண்டி நாளை லேப்டாப்? மாணவர்களுக்கு குட் நியூஸ்!

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது தேர்வு முடிவுகளும் வெளிவந்துவிட்டது. மாணவர்கள் தற்பொழுது அன்றாடம் பள்ளிக்கு சென்று பாடங்களை கற்பித்து வருகின்றனர். மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், பள்ளி சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக ஓர் ஆண்டுகளாகமாக  மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி வழங்கபடவில்லை.

அதனைத் தொடர்ந்து இன்று முதல் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கினர். ஒரு மாதம் முடிவதற்குள் அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் மிதிவண்டி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர். அதேபோல  மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினியும் இரண்டு ஆண்டுகாலமாக வழங்காமல் உள்ளனர்.இதுகுறித்து சில  தினங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்தார். அதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டேப் வழங்குவோம் என்று கூறினோம்.

ஆனால் மாணவர்களுக்கு டேப்பை விட மடிக்கணினி தான் பயனுள்ளதாக இருக்கிறது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.அதுமட்டுமின்றி தற்பொழுது கைவசம் உள்ள மடிக்கணிகள் சரியான முறையில் உள்ளத என பரிசோதனை செய்ய உளதாகவும் கூறினார்.அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக கூறினார். அந்த வகையில் பார்க்கும் பொழுது  நிலுவையில் இருந்த மிதிவண்டிகள் இன்று முதல் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதேபோல இன்னும் ஒரு சில தினங்களில் மடிக்கணினியும்  வழங்கப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleபடப்பிடிப்புத் தளத்துக்குள் புகுந்த தாக்கிய மர்மநபர்கள்… கேரள சினிமாவில் பரபரப்பு!
Next articleஉங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!…