பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

0
343
A boy who flirted with a girl on the bus!! Fellow passengers who were beaten and kicked !!
A boy who flirted with a girl on the bus!! Fellow passengers who were beaten and kicked !!

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார்.

கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினார். அப்போது அவரது பின் சீட்டில் இருந்தவர் ஹேமாவை சீண்டிக் கொண்டே வந்தார். முதலில் ஹேமா எச்சரித்தார். திரும்பவும் அந்த நபர் தொடர்ந்து சில்மிசத்தில் ஈடுபட்டதால் கோபமடைந்த ஹேமா கூச்சலிட்டு நடத்துனரிடம் புகார் தெரிவித்தார். உடனே சக பயணிகள் அந்த நபரை அடித்து உதைத்தனர்.

நடத்துனர் அந்த நபரை பயணிகளிடம் இருந்து மீட்டு, திருப்பூர் பேருந்து நிலையம் வந்ததும்  திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் காவல் நிலையம் வந்த ஹேமாவின் கணவர் செல்வராஜ் மற்றும் ஹேமா அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleஇளநிலை தேர்வுகள் முடியாத நிலையில் முதுநிலை படிப்புக்கு சேர்க்கை தொடக்கம்!அதிருப்தியடைந்த பேராசிரியர்கள்!!
Next articleதமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!!