தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!!

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்! முன்னாள் புதுவை எம்பி ராமதாஸ் வலியுறுத்தல்!

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக கொண்டு வர வேண்டும் என்று புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக முன்னாள் எம்.பி ராமதாஸ் அவர்கள் அறிக்கை வெளியுட்டுள்ளார்.

தமிழ் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று முன்னாள் எம்பி ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ் வாரியத்தில் படிக்கும் பொழுது 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் 6 பாடப்பிரிவுகள் இருக்கும். அதில் ஒரு மாணவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை கட்டாயமாக படிக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ முறையில் 5 பாடப்பிரிவுகள் உள்ளது. அதில் மாணவர்கள் ஆங்கிலத்தை கட்டாயமாக படக்க வேண்டும். தமிழ் பாடத்தை மாணவர்கள் விரும்பினால் தேர்வு செய்து படிக்கலாம்.

சி.பி.எஸ்.இ முறையில் 5 பாடப்பிரிவுகள் இருக்கும் நிலையில் அதில் ஆங்கிலப் பாடம் கட்டாயமான பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்து 4 பாடப்பிரிவுகள் என 5 பாடங்களை படிக்க வேண்டும். தமிழ் பாடத்தை விரும்பினால் தேர்வு செய்து படிக்கலாம். கட்டாயம் இல்லை.

கலை மற்றும் மானுட பிரிவில் 19 விருப்பப் பாடப்பிரிவுகள் உள்ளது. மாணவர்கள் ஆங்கிலத்தை கட்டாயமாக தேர்வு செய்து மேலும் 4 பாடங்களை அடங்கிய பாடப்பிரிவை தேர்வு செய்து மொத்தம் 5 பாடங்கள் படிக்க வேண்டும். தமிழ் பாடம் கட்டாயமாக்கபடாத நிலையில் மாணவர்கள் தமிழை படிக்காமலேயே கல்லூரி படிப்பை முடித்து விடுகிறார்கள். எனவே புதுவை மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கட்டாயமாக்கி முன்பு போல 6 பாடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு கூட குடிமை பணி போன்ற அகில இந்திய பணி  தேர்வுகளில் தமிழை ஒரு பாடமாக சேர்த்துள்ளது. தமிழில் தேர்வு எழுதலாம் என்று அனுமதி அளித்துள்ளது. தமிழ் பேசும் மைந்தர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.