பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

Date:

Share post:

பேருந்தில் பெண்ணிடம் சில்மிசம் செய்த வாலிபர் !! அடித்து உதைத்த சக பயணிகள் !!

திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் ஹேமா. இவரது கணவர் செல்வராஜ் இவர்களுக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹேமா அவருடைய தோழியின் வீட்டில் நடக்கும் விஷேசத்திற்காக தனது மகளுடன் கேரளா சென்றார். தோழியின் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் சொந்த ஊரான திருப்பூருக்கு கிளம்பினார்.

கேரளாவில் இருந்து பொள்ளாச்சி வந்தவர், அங்கிருந்து திருப்பூர் செல்லும் பஸ்ஸில் ஏறினார். அப்போது அவரது பின் சீட்டில் இருந்தவர் ஹேமாவை சீண்டிக் கொண்டே வந்தார். முதலில் ஹேமா எச்சரித்தார். திரும்பவும் அந்த நபர் தொடர்ந்து சில்மிசத்தில் ஈடுபட்டதால் கோபமடைந்த ஹேமா கூச்சலிட்டு நடத்துனரிடம் புகார் தெரிவித்தார். உடனே சக பயணிகள் அந்த நபரை அடித்து உதைத்தனர்.

நடத்துனர் அந்த நபரை பயணிகளிடம் இருந்து மீட்டு, திருப்பூர் பேருந்து நிலையம் வந்ததும்  திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் காவல் நிலையம் வந்த ஹேமாவின் கணவர் செல்வராஜ் மற்றும் ஹேமா அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த நபரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

spot_img

Related articles

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா…? – வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!!

நயன்தாராவின் பணத்தை சுருட்டிய பிரபுதேவா...? - வெளியான தகவல் ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. இவருக்கென்று...

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் – கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!!

சிம்ரனை காதலித்து கழிட்டி விட்ட நடிகர்கள் - கல்யாணம் வரை சென்று பிரிந்து போன காதல் கதை!! 90ஸ் கால கட்டத்தில் தன் இடுப்பு அழகால்...

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் – வெளியான தகவல் – ஷாக்கான ரசிகர்கள்!!

பிரசாந்த் பட விழாவில் அவமானப்பட்ட நடிகர் விஜய் - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்!! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர்...

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா!!

5 முன்னணி நடிகர்களின் படங்களை வெற்றி பெற வைத்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் 5 முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தனது தனித்துவமான...