நெஞ்சில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற ஒரு கற்பூரவல்லி இலை போதும்!
குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவருக்கும் பருவ காலங்களில் ஏற்படக் கூடிய சளி, இருமல், சுவாசக் கோளாறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட மூலிகை கற்பூரவல்லி.
இதை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிப்பதன் மூலம் சளி, இருமல் உள்ளிட்ட அனைத்து பாதிப்புகளும் குணமாகும்.
சளி இருமலை போக்கும் கற்பூரவல்லி – இதை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கற்பூரவல்லி இலை – ஒன்று
2)தேன் – சிறிதளவு
3)சுக்கு – ஒரு துண்டு
செய்முறை:-
ஒரு கற்பூரவல்லி இலையை தண்ணீரில் சுத்தம் செய்து உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து சுக்கு ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
அடுத்து இடித்த கற்பூரவல்லி இலையை சேர்க்கவும். அதனை தொடர்ந்து இடித்த சுக்கை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி கரைந்து வெளியேறும்.