வெறும் 10 நிமிடத்தில் அழுக்கு படிந்த கேஸ் அடுப்பை புதிது போன்று மாற்றி விடலாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

வெறும் 10 நிமிடத்தில் அழுக்கு படிந்த கேஸ் அடுப்பை புதிது போன்று மாற்றி விடலாம்!! இந்த ட்ரிக்கை பயன்படுத்துங்கள்!!

நம்மில் பெரும்பாலானோர் வீடுகளில் உள்ள கேஸ் அடுப்பு அழுக்காகவும், எண்ணெய் பிசுக்குடனும் இருக்கும். சமைத்து முடித்ததும் அடுப்பை சுத்தம் செய்து பராமரித்து வந்தோம் என்றால் அடுப்பு புதிது போன்று இருக்கும். ஆனால் நம்மில் பலர் கேஸ் அடுப்பை துடைக்க சலித்து கொள்வதால் அவை நாளடைவில் கறை படிந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடுகிறது. இதை எலுமிச்சை மற்றும் சமையல் சோடாவை பயன்படுத்தி சரி செய்து விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை பழம் – 1

*வாஷிங் பவுடர் – 1 தேக்கரண்டி

*சமையல் சோடா – 2 தேக்கரண்டி

*தண்ணீர் – தேவையான அளவு

*காட்டன் துணி – 2

சுத்தம் செய்யும் முறை:-

முதலில் 2 எலுமிச்சம் பழத்தை எடுத்து அதை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். முழு எலுமிச்சம் இல்லையென்றால் சாறு பிழிந்து தூக்கி போடும் நிலையில் உள்ள எலுமிச்சை தோலை அதில் போட்டுக் கொள்ளவும். பின்னர் அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். எலுமிச்சை சாறு தண்ணீரில் இறங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் அதில் 2 தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் 1 தேக்கரண்டி வாஷிங் பவுடர் சேர்த்து கலக்கி நன்கு ஆற விடவும். இவை நன்கு ஆறியப் பின் தண்ணீரில் உள்ள எலுமிச்சை தோலை நீக்கி கொள்ளவும்.

அடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை ஊற்றிக் கொள்ளவும்.

இதை அடுப்பில் ஸ்ப்ரே செய்வதற்கு முன்னர் ஒரு காட்டன் துணியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை அடுப்பில் உள்ள கறைகளின் மேல் துடைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஸ்ப்ரேயரில் உள்ள கலவையை அடுப்பில் அழுக்கு மற்றும் எண்ணெய் பிசுக்கு இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து 5 முதல் 10 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்னர் காட்டன் துணி ஒன்றை வைத்து அடுப்பு முழுவதும் துடைத்துக் கொள்ளவும். கறை நீங்க வில்லைஎன்றால் மீண்டும் ஸ்ப்ரே செய்து சில நிமிடங்கள் ஊற விட்டு துடைக்கவும். இவ்வாறு செய்தால் சில நிமிடத்தில் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்புடன் காணப்பட்ட அடுப்பை புதிது போன்று காட்சியளிக்கும்.