சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Photo of author

By CineDesk

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

CineDesk

Updated on:

சகபயணியிடம் தவறாக நடந்து கொண்ட பிரபல நடிகர்!! உரிய நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி இவர் மீது குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம். அதன் வகையில் தற்போது இவர் விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டததாக புகார் எழுந்துள்ளது.

கோவா விமான நிலையத்தில் உள்ள இண்டிகோ விமானத்தில் செல்ல காத்திருந்த போது நடிகர் விநாயகன் தன்னிடம் தவறாக நடந்தார் என்று பயணி ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார்.

விமானத்தில் ஏறுவதற்கு முன் ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்றும், அதே விமானத்தில் ஏறிய நடிகர் விநாயகன் தன்னை வீடியோ எடுத்ததாக கூறி என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்றும் குற்றம் கூறி உள்ளார்.

தான் எந்த வீடியோவும் எடுக்கவில்லை என்றும், வேண்டுமென்றால் போனை சோதனை செய்யுங்கள் என்று கூறியும் நம்பாமல் அவர் தொடர்ந்து அப்பயணியிடம் அத்துமீறி நடந்ததாக புகார் வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பயணி விமான நிறுவனத்திடம் புகாரளித்தும் அவர்கள் உரிய பதில் அளிக்காததால், பிறகு ஏர்சேவா போர்டல் மூலம் சிவில் போக்குவரத்து துணைச் செயலரிடம் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் விநாயகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளா ஐகோர்ட்-இல் மனு தாக்கல் செய்யப்பட்டு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுவில் நடிகர் விநாயகனை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு வக்கீலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.