கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!

Photo of author

By Savitha

கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி!

Savitha

கல்லூரி வளாகத்தில் துப்புரவுப் பணியாளர் மீது கார் மோதல்! சம்பவ இடத்திலேயே பலி! 

கல்லூரியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர் மீது கல்லூரி வளாகத்திலேயே கார் மோதியதில் பெண் பணியாளர் தூக்கி வீசப்பட்டது உயிரிழந்தார் – இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

திருச்சி மணிகண்டம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் ரூபி என்கிற பெண் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது ஆல்டோ கார் ஒன்று அதிவேகத்தில் வந்த கார் எதிர்பாராத விதமாக ரூபி மீது மோதி உள்ளது.

மோதிய வேகத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கல்லூரிக்கு அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்களை வழங்குவதற்காக ஆல்டோ காரில் வந்த சீனிவாசன் என்பவர் திரும்பி செல்லும் பொழுது அதிவேகமாக காரை ஓட்டி வந்ததும் எதிர்பாராத விதமாக அவர் மீது வேகமாக மோதிதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விபத்து குறித்த CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.