தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார் !

0
151
#image_title

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார்!

இந்திய குடிமக்களின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

வங்கியில் கணக்கு வைக்க வேண்டும் என்றாலும், பேருந்து, இரயில் போன்ற பயணச்சீட்டுகள் முன் பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அனைத்து செயல்களிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது.

தனி நபரின் அடையாளமாக இருக்கும் ஆதாரை முதலில் அரசு  அறிமுகப்படுத்தியது. ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்றாலும், பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் அரசு இ-சேவை மையம் சென்று தான் மாற்ற வேண்டியிருக்கும்.

தற்போது மக்களுக்கு எளிதாகும் வகையில், தனியார் நிறுவனதிற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதாவது ஆதார் அடையாள அட்டையை மக்களிடம் கொண்டு சேர்க்க, விசாரணை செய்ய, ஆதார் விதிகளில் மாற்றம் செய்து, தனியார் நிறுவனங்களுக்கு, மத்திய தொழில் நுட்ப அமைச்சகம் உரிமம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் மக்களுக்கு ஆதார் எளிதில் கிடைத்துவிடும். என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் அதை எந்த தனியார் வாங்கியுள்ளது. என்பதை பற்றி எந்த வித தகவலும் வெளிவரவில்லை.   இதன் மேலும் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்றும்  எதிர் பார்க்கப்படுகிறது.