மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! தக்காளி விலை சரிவு!!
சில மாதங்களாகவே காய்கறிகளின் விலை உச்சம் தொட்டு வருகிறது, அதிலும், குறிப்பாக தக்காளியின் விலை பன் மடங்கு அதிகரித்து வருகிறது. தங்கத்தை விட தற்போது தக்காளியை தான் அனைவரும் பாதுகாத்து வருகின்றனர்.
சென்ற வாரத்தில் இருந்து ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் இருநூறுக்கு மேல் விற்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, இதை கட்டுப்படுத்த தமிழக அரசு தினம்தோறும் ஏராளமான நடைமுறைகளை செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில் கொண்டு வரப்பட்டது தான் ரேஷன் கடைகளில் தக்காளி வழங்கும் திட்டம்.
இத்திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக துவங்கப்பட்டு தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு உச்சம் தொடும் தக்காளி விலையானது இன்று சிறிதளவு குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூபாய் நூறிற்கும் குறைந்து விற்கப்படுகிறது.
இதில் முதல் ரக தக்காளியானது ஒரு கிலோவிற்கு ரூபாய் 120 என்று விற்கப்படுகிறது. இரண்டாம் ரக தக்காளி ரூபாய் எண்பது எனவும் விற்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கூறிய வியாபாரிகள் தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்து வருகிறது. எனவே, வரும் நாட்களில் தக்காளியின் விலை முழுவதுமாக குறையும் என்று கூறி இருக்கிறார்கள்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளியின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.