மக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!
நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு எண்ணெய், துவரம் பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பொருட்களை வாங்க ரேசன் அட்டை அவசியமான ஒன்றாகும். அதுமட்டும் இன்றி முக்கிய சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் செய்ய ரேசன் நகல் அவசயம் ஆகும்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த கார்டை பெற விண்ணப்பம் செய்தவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக தமிழக அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இதற்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. எட்டு மாதங்களுக்கு முன் விண்ணப்பம் செய்த நபர்களுக்கு இன்று வரை ரேசன் கார்டு கிடைக்க பெறாததால் அவர்களால் ரேசன் பொருட்கள் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. அதேபோல் ரேசன் கார்டில் பெயர் நீங்கம், பெயர் சேர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கும் அவை கிடைக்காததால் ரேசன் கார்டு வைத்து விண்ணப்பம் செய்ய கூடிய திட்டங்களுக்கும், பிற தேவைக்கும் விண்ணப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்பொழுது இது குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
அது என்னவென்றால் வருகின்ற டிசம்பர் 9 ஆம் தேதி ரேசன் அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல் உள்ளிட்டவைகள் தொடர்பான சேவைகள் அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகத்தில் முகாம் நடைபெற இருப்பதால் ரேசன் அட்டைதாரர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.