சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!!

0
98
A happy news for tourists!! No more fees!!
A happy news for tourists!! No more fees!!

சுற்றுலா பயணிகளுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! இனி கட்டணம் குறைவு!!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கக்கூடிய கொடைக்கானல். இங்கு கோடைக் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியுடன் தங்களின் கோடை விடுமுறையை கழித்து விட்டு செல்வார்கள்.

இங்கு அனைத்து இடங்களும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், ஒரு சில இடங்களுக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்.

இதற்கென்று குறிப்பிட்ட அளவு கட்டணமும் செலுத்த வேண்டும். அந்த வகையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் கொடைக்கானலில் உள்ள ஒரு சுற்றுள்ள தளம் தான் இந்த பேரிஜம் ஏரி.

இந்த இடத்திற்கு செல்வதற்கு அனுமதி பெற்று கட்டணம் கட்டியபிறகு தான் செல்ல முடியும். இந்த அபெரிஜம் ஏரிக்கு வனத்துறை வாகனத்தில் செல்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் நூறு எனவும்,

சொந்த அல்லது வாடகை வாகனத்தில் பயணம் செய்ய காருக்கு ரூபாய் இருநூறு மற்றும் வேனுக்கு ரூபாய் முன்னூறு எனவும் கட்டணம் செலுத்த வேண்டும்.

அனால் இந்த கட்டணம் மேலும் உயர்த்தப்படும் என்று நேற்று வனத்துறை சார்பாக அறிவிப்பு வெளியானது. எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென வனத்துறையினர் இவ்வாறு கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாகன ஓட்டுனர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே அதர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவதோடு மட்டுமல்லாமல், இதையே நம்பி இருக்கக்கூடிய வாகன ஓட்டுனர்களின் வேலையும் பாதிக்கப்படும் என்று கருத்துக்கள் எழுந்தது.

எனவே, இதனை எதிர்த்து அனைவரும் கோரிக்கையை எழுப்பியதால் தற்போது இந்த கட்டணம் உயர்வானது வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்வதற்கு பழைய கட்டணமே செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Previous articleகல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!
Next articleசிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடிபேன்… நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!