கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா!!

0
37

 

கல்லித்துறையாக மாறிய கல்வித்துறை… கடைசி வரை எழுத்து பிழையை கண்டுபிடிக்காமல் நடந்து முடிந்த அரசு விழா…

 

சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழா ஒன்றில் அடிக்கப்பட்ட பேனர் ஒன்றில் கல்வித்துறை என்பதற்கு பதிலாக கல்லித்துறை என்று அச்சடிக்கப்பட்டிருக்க கடைசி வரை அந்த எழுத்துப் பிழையை கண்டுபிடிக்காமல் அந்த அரசு விழா நடந்து முடிந்துள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியித் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் நேரு அவர்கள் பங்கேற்றார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் நேரு அவர்கள் இலவச சைக்கிள்களை வழங்கினார்.

 

இதையடுத்து விழா மேடையில் வைக்கப்பட்ட பேனரில் பள்ளிக் கல்வித்துறை என்பதற்கு பதிலாக பள்ளிக் கல்லித்துறை என்று பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை அறிந்த பின்னர் தமிழ் மொழியை சீரழிக்கும் வகையில் இது போன்று எழுத்துப் பிழையுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது என்று புகார்கள் எழுந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் பேனரில் இந்த பிழை உள்ள தகவல் தெரியவந்தது.

 

இதற்கு மத்தியில் கடைசி வரை எழுத்துப்பிழை இருப்பதை கண்டுபிடிக்காமல் அமைச்சர் நேரு அவர்கள் எழுத்துப்பிழை உள்ள பேனரின் முன்னிலையில் வைத்து மூன்று மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். பேனரில் எழுத்துப் பிழை உள்ளது தெரியவந்த பின்னர் மற்ற மாணவ மாணவிகளுக்கு மேடையின் அருகே வைத்து இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

 

எழுத்துப் பிழையுடன் வைக்கப்பட்ட பேனர் தமிழ் அன்னைக்கே பொறுக்காது என்று தமிழ் அறிஞர்கள் கொத்தித்துக் கொண்டு இருக்கின்றனர். கல்வி அறிவை வளர்ச்சியடைய வைக்கும் பள்ளிக் கல்வித்துறையே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் எழுத்துப் பிழையுடன் வைக்கப்பட்ட பேனர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.