கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 9 பேர் பலி

0
162

நேப்பாளத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பெய்த கன மழை காரணமாக நரஹரிநாத் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் இறந்துள்ளனர். 9 பேரில் 7 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் 58 பேரைக் காணவில்லை என்றும் 87 பேர் காயமுற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களில் அங்கு வெள்ளத்திற்கும் நிலச்சரிவுக்கும் 160 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous articleதிமுக விற்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும்! சோனியா காந்தி கடிதம்!
Next articleவங்கிக்கு செல்லாமல் கல்விக் கடன் பெறலாமா? மாணவர்களே இது உங்களுக்குத்தான் !