விறுவிறுப்பாக அரங்கேறிய போட்டி! மக்கள் அசந்த நேரத்தில் பெண் போலீஸின் அந்தரங்க இடத்தை தொட்ட வாலிபர்!
இந்தியாவில் தற்பொழுது ஐ எஸ் எல் கால்பந்து போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டியானது கேரளாவில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஏ டி கே மோகன் பாகன் அணிக்கு இடையே நேற்று போட்டி நிலவியது. இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். அந்த ரசிகர்களின் ஒருவர்தான் அருண் எம் தாமஸ், இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தற்பொழுது பெங்களூரில் வசித்து வருகிறார்.
இவர் போட்டி நடந்து கொண்டிருக்கும் வேளையில் மைதானத்தில் பணியில் இருந்த பெண் போலீசியின் அந்தரங்க பகுதிகளை தொட்டு பாலில் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். பாதிப்படைந்த பெண் போலீசார் அவரை பிடிக்கும் முயன்ற போது, அந்தப் பெண் போலீசின் கைகளை பிடித்து தாக்கி ஓடி விட்டார்.அதனைக் கண்ட இதரபோலீசார் அவரை பின்தொடர்ந்து விரட்டினர். பின்பு அவரைப் பிடித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவர் மீது பெண்ணை அடக்கி தாக்குதல், உடல் தொடர்பு சார்ந்த பாலியல் தொந்தரவு, அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்த உயர் அதிகாரி பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண் நடந்த சம்பவத்தை எண்ணி மிகவும் அதிர்ச்சியில் உள்ளார். பணியில் இருக்கும் பெண் போலீசாரிடம் இவ்வாறு பாலில் சீண்டல் செய்தது இதுவே முதல் முறை. இனி இவ்வாறான குற்றங்கள் நடக்காது. பெண்கள் இந்த சம்பவத்தால் அஞ்சி போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு வருவதை நிறுத்தி விடக்கூடாது என தெரிவித்தார்.