பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி!

பூம்ராவுக்கு மாற்று கண்டிப்பா இவர்தான்… ஒரே ஓவரில் ஜாம்பவானையே பாராட்ட வைத்த ஷமி!

நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசி கட்டத்தில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார்.

நேற்று நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்னயித்த 187 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா, 180 மட்டுமே சேர்த்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் ஆஸி அணிக்கு இறுதி ஓவரில், 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இறுதி ஓவரை வீசிய ஷமி வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து கடைசி 4 பந்துகளிலும் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தனைக்கும் இந்த போட்டியின் ஆடும் லெவனில் ஷமி இல்லை. ஆனால் பயிற்சி போட்டியில் வெளியில் இருந்தும் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவரை வீச வைத்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா.

அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. இதையடுத்து பூம்ரா இல்லாதை வெற்றிடத்தை ஷமி போக்குவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. இதுபற்றி ட்வீட் செய்துள்ள சச்சின் டெண்டுல்கர் “ பூம்ரா அணியில் இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். அவருக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷமி, தன்னுடைய தேர்வு சரி என நிரூபித்தார். பூம்ராவுக்கு சரியான மாற்றுவீரர் அவர்தான்” எனப் புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.