கோவை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு புகுந்த மர்ம கும்பல்! இந்த வழக்கில் தேடப்பட்டவர் கைது!
கோவை மாவட்டம் காந்திபுரம் 100 அடி ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையின் இயக்குனராக டாக்டர் ராமச்சந்திரன் (75) பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர். உமாசங்கர் என்பவர் இந்த மருத்துவமனையை வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்ற பெயரில் மாற்றம் செய்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி மருத்துவமனையை சூறையாடினார். இது குறித்து டாக்டர் ராமச்சந்திரன், உமாசங்கர் முருகாவானன் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் ஜாமையில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் மர்மமான முறையில் பலியானார் இதற்கிடையில் தனியார் மருத்துவமனைகுள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எல் அண்ட் ராமச்சந்திரன் உட்பட 13 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாய்பாபா காலனியில் உள்ள வழக்கறிஞர் ராஜேந்திரன் வீடு காந்திபுரத்தில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் லார்ஜ் உட்பட ஐந்து இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்கள்.
மேலும் இந்நிலையில் வழக்கறிஞர்ரிடம் மேலாளராக பணிபுரிந்து வந்த கணபதியைச் சேர்ந்த ஆர் பிரபு (38) என்பவர் கேரளா மாநில கொச்சியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இந்த தகவலின் பேரில் போலீசார் நேற்று கேரளாவிற்கு விரைந்து சென்று பிரபுவை கைது செய்தனர். மேலும் அவர் கோவைக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.