தனியார் பேருந்தும் திருடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி கோர விபத்து!.. அதிர்ச்சியில் பேருந்து பயணிகள்!…
சென்னையில் வடபழனி பேருந்து நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் தெரிந்திருக்காக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் அவ்வழியாக வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்திற்காக காத்திருந்த அந்த நபர்களிடமிருந்து செல்போனை பறித்துவிட்டு தாம்பரம் நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பினர்.
பிறகு செல்லும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவு வாயில் அருகில் நின்று இருந்த முகமது இப்ராகிம் என்பவரிடம் செல்போனை பறித்து விட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றனர். இவர்கள் கொள்ளையடித்து விட்டு தாம்பரம் பேருந்து நிலையம் அருகே வேகமாக சென்றனர்.
அப்போது திடீரென திருடர்களின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மோட்டார் சைக்கிள் ஜி.எஸ்.டி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்து ஒன்று நின்றிருந்தது. நின்று கொண்டிருந்த அந்த பேருந்தின் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்த பெட்ரோல் டேங்க் மூடி உடைந்து பெட்ரோல் அனைத்தும் வண்டியில் சிதறி உராய்வு காரணமாக தீப்பற்றியது. மோட்டார் சைக்கிளில் பற்றிய தீ பேருந்து முழுவதும் மலமலவென பற்றியது.
இதனால் அந்த பேருந்து கொழுந்துவிட்டு எரிந்தது.உடனடியாக அங்கிருந்த கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடினர்.தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.எனினும் பஸ் மோட்டார் சைக்கிள் இரண்டும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகியது.
இதனையடுத்து செல்போன் பறிப்பு தொடர்பாக வடபழனி மற்றும் விமான நிலைய போலீசார் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்தது குறித்து தாம்பரம் போலீசாரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் இந்த பேருந்து முழுவதும் பரபரப்பு சூழல் நிலவி வந்தது.