பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..

0
163
A schoolgirl who bravely complained to the officials after being sexually harassed!! Both the teachers were arrested!?..
A schoolgirl who bravely complained to the officials after being sexually harassed!! Both the teachers were arrested!?..

பாலியல் சீண்டலை தொடர்ந்து..தைரியமாக அலுவலர்களிடம் புகார் அளித்த பள்ளி மாணவி!! ஆசிரியர்கள் இருவரும் அரெஸ்ட்!?..

கோவை தொண்டாமுத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவிகள் அப்பள்ளியில்  படித்து வருகின்றனர். அதே பள்ளியில் தாவரவியல் ஆசிரியர் பாலச்சந்திரன் இவருடைய வயது 43. இயற்பியல் ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் பன்னிரெண்டாம்  வகுப்பைச் சேர்ந்த மாணவி வயது 17.இந்த மாணவிக்கு தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. தனக்கு நேர்ந்ததை பெற்றோர்களிடம் கூறினார் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்களோ என்ற எண்ணத்தில் அந்த மாணவி இதைப்பற்றி யாரிடமும் தெரிவிக்க இல்லை.

இதை சாதகமாக பயன்படுத்தி அந்த இரு ஆசிரியர்களும் தொடர்ந்து அந்த மாணவிக்கு பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தியுள்ளார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில்  போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இதில் அந்த மாணவி 1091 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் புவனேஸ்வரியிடம் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை குறித்து புகார் அளித்தார். மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்றனர். பள்ளியில் பணியாற்றும் அந்த இரு ஆசிரியர்களையும் கைது செய்தனர்.

மேலும் அந்த இரு ஆசிரியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசேலம் மாவட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்திய கிராம மக்கள்! காரணம் என்ன அப்பகுதியில் பரபரப்பு!
Next articleஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!