ஒரு ஸ்பூன் போதும் எவ்வளவு பயங்கரமான சளி இருமல் இருந்தாலும் ஒரே நாளில் சரி செய்யக்கூடிய அற்புத மருந்து!!
ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டாலே அதனுடன் சளி, இருமல், தலைவலி, தொண்டை வலி என்று பலவும் சேர்ந்து வந்துவிடும். இவற்றை ஒரே நாளில் சரி செய்யக்கூடிய ஒரு ஈஸியான ரெமிடியை பற்றி அறிந்து கொள்வோம்.
இந்த ரெமிடியை 7 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட்டு வரலாம். பயங்கரமான சளி, எப்பேர்ப்பட்ட காய்ச்சல், தொண்டை வலி ஆகியவற்றை ஒரே நாளில் சரி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேதிக் ரெமிடியை காண்போம்.
இந்த ரெமிடியை செய்வதற்கு எட்டிலிருந்து பத்து மிளகும் நான்கு திப்பிலியும் தேவை. இப்போது இந்த மிளகை உரலில் பொடியாக இடித்துக் கொள்ளவும். இதனுடன் திப்பிலியையும் உரலில் போட்டு பொடியாக இடித்துக் கொள்ளவும். இந்த பொடியுடன் நான்கு தேக்கரண்டி அளவு தேனை கலந்து கொள்ளவும்.
இவ்வாறு கலந்த இந்த ஆயுர்வேதிக் ரெமிடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தேனில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது. இந்த தேனை இதனுடன் கலந்து நாம் சாப்பிடும் போது தொண்டையில் உள்ள சளியை நீக்கிவிடும்.
ஏழு மாத குழந்தையிலிருந்து இரண்டு வயது உள்ள குழந்தைகளுக்கு இதில் ஒரு சிட்டிகை அளவு கொடுத்தாலே போதுமானது. இரண்டு வயதில் இருந்து ஐந்து வயது இருக்கும் குழந்தைகளுக்கு இதில் கால் தேக்கரண்டி அளவு கொடுக்க வேண்டும். ஐந்து வயதிலிருந்து பத்து வயது இருக்கும் குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி அளவு இந்த ஆயுர்வேதிக் ரெமிடியை கொடுக்கவும்.
பத்து வயதிலிருந்து பெரியவர்கள் வரை இந்த ரெமிடியை ஒரு தேக்கரண்டி அளவு தாராளமாக சாப்பிடலாம். இந்த ரெமிடியை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் அளவு வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது சாதாரண தண்ணீரை குடித்து வரலாம். இந்த ஆயுர்வேதிக் ரெமிடியை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு சாப்பிட்டு வர சளி இருமல் காய்ச்சல் தொண்டை வலி என்று அனைத்து நாள்பட்ட பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

