இரவில் திடீரென்று வரும் இருமல்! அதை சரி செய்ய அசத்தலான ரெண்டு டிப்ஸ் இதோ!

0
247
#image_title

இரவில் திடீரென்று வரும் இருமல்! அதை சரி செய்ய அசத்தலான ரெண்டு டிப்ஸ் இதோ!

நம்மில் சிலருக்கு இரவில் திடீரென்று இருமல் வரும். இதை குணப்படுத்துவதற்கு தேவையான அசத்தலான இரண்டு டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.

சாதாரணமாக ஒருவருக்கு இருமல் என்பது தண்ணீரை மாற்றி குடிப்பதால் ஏற்படும். அல்லது அதிக அளவில் குளிர்ந்த பொருட்களை சாப்பிட்டாலும் ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு இரவில் தூங்கும். பொழுது அல்லது தூங்கச் செல்லும் பொழுது திடீரென்று இருமல் ஏற்படும்.

அல்லது தொண்டை அடைப்பது போலவும் இருமல் ஏற்படும். இதற்கு காரணம் தொண்டை அழற்சி தான். தொண்டை அழற்சி இருந்தாலும் இரவு நேரங்களில் திடீரென்று தொண்டை அடைப்பது போல இருமல் ஏற்படும். அவ்வாறு திடீரென்று இருமல் ஏற்பட்டால் பயப்படத் தேவையில்லை. இந்த இரண்டு முறைகளில் ஒன்றை பயன்படுத்தலாம்.

இரவு நேரங்களில் தொண்டை அடைப்பது போல ஏற்படும் இமயமலை குணப்படுத்தும். இரண்டு வழிமுறைகளும் எளிமையானது. அது என்னென்ன என்று பார்க்கலாம்.

* இரவு நேரங்களில் தொண்டை அடைப்பது போல இருமல் ஏற்பட்டால் முதலில் பாலை காய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். மஞ்சள் தூளில் உள்ள குர்குமின் தொண்டை அழற்சியை உடனடியாக குணப்படுத்தி விடும்.

* அடுத்ததாக அதே போல இரவில் திடீரென்று இருமல் ஏற்பட்டால் பாலை காய்ச்சி அதில் சுத்தமான இயற்கையான தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்தாலும் இருமல் சரியாகிவிடும்.