கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

Photo of author

By Parthipan K

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

Parthipan K

A teenager stabbed a friend for asking for money to drink alcohol in Coimbatore! The area is busy!

கோவை மாவட்டத்தில் மது குடிக்க பணம் கேட்டு நண்பரை குத்திய வாலிபர்! பரபரப்பில் அப்பகுதி!

கோவை மாவட்டம் ராமநாதபுரம் அடுத்த சுங்கம் பைபாஸ் ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் செல்வம் (34). செல்வம் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்னதாக கால் டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தாராக கூறப்படுகின்றது. அப்பொழுது இவருக்கும் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலையில் செல்வம் நேற்று சுங்கம் சிந்தாமணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே புகுந்துகாக நின்று கொண்டிருந்தார். அப்பொழுது மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் அந்த பேருந்து நிலையத்திற்கு வந்தார். மேலும் அப்போது மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன் செல்வத்திடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு செல்வம் தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய உடன் ஆத்திரமடைந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வத்தை குத்தியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் செல்வம் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் செல்வத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த கத்திக்குத்து குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இந்த புகாரின் பேரில் மணிகண்டன் என்கிற குண்டு மணிகண்டன் மீது கொலை முயற்சி உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவர் மீது அப்புறம் காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளது மற்றும் இவர் காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.