ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

Photo of author

By Vijay

ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி – கொலை செய்த கணவன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜாஸ்பூரில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாஸ்பூரை சேர்ந்த சங்கர் (கொலை செய்தவர்) இவரின் மனைவி ஆஷா, திருமணமான இந்த புதுமண தம்பதியர்கள். ஆரம்பத்தில் சந்தோஷமாக தான் இருந்துள்ளனர்.

நாளடைவில் இருவருக்கும் சின்ன சின்ன சண்டைகள் வந்துள்ளது. பின் பெண்ணின் வீட்டார் சமாதானம் செய்து சங்கருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

சங்கர் ஆயிஷா இருவருக்கும் மது பழக்கம் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம், அப்படி தான் இருவரும் நேற்றைய முன் தினம் மது அருந்தியிருக்கிறார்கள்.

மது தலைக்கேறிய சங்கர், ஆஷாவிடம் உடல் உறவு செய்ய அழைத்துள்ளார். அதற்கு ஆஷா மறுப்பு தெரிவிக்கவே ஆஷாவுடன் வலுக்கட்டாயமாக உடல் உறவு செய்திருக்கிறார் சங்கர்.

இதில் ஆத்திரமடைந்த ஆஷா தற்கொலை செய்ய முயன்று அருகில் உள்ள கிணற்றில் குதித்திருக்கிறார்.

மனைவியை காப்பாற்ற நினைத்து சங்கர், கிணத்தில் குதித்து ஆஷாவை காப்பாற்றியுள்ளார். காப்பாற்றிய பின்னும் ஆயிஷாவுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

இருவரும் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த சங்கர், ஆஷாவை கத்தியால் வெட்டியுள்ளார். ஆஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆஷாவை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் ஆஷா சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

இதை தொடர்ந்து சங்கர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மில்னா குரே கூறினார்.