சேலத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை! திடுக்கிடும் சம்பவம்!

0
174

சேலம் மாவட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிய பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வீடியோ மிகவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ராஜாஜி ரோடு பகுதியில் லட்சுமி கிருபா அப்பார்ட்மென்ட் உள்ளது. இது ஒரு 4 மாடி கட்டிடம் ஆகும். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சண்முக சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சண்முகசுந்தரம் ஜன்னல் மற்றும் கதவு மொத்த விற்பனை நிலையம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி. இவருக்கு 40 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.


சில காலங்களாக சண்முகசுந்தரத்தின் மனைவியான விக்னேஷ்வரி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மனநிலை சரியில்லாதவர் போல் நடந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.

இவர் இன்று அதிகாலை ஐந்தரை மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்று மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு அவர் நடந்துகொண்டு திடீரென்று மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை அறிந்த பொதுமக்கள் உடனடியாக அஸ்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


உடனே தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் விக்னேஸ்வரி அவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மனம் உடைந்த விக்னேஷ்வரி தற்கொலை செய்திருக்க கூடும் என்று கருதுகின்றனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் அஸ்தம்பட்டி காவல் ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் ஒரு குழுவாக அமைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நான்காவது மாடியில் இருந்த ஒரு தாய் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அங்கு உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகெத்தாக பாம்பு கறி சாப்பிட்ட இளைஞர்கள்! கொத்தாக அள்ளிய வனத்துறை !
Next articleஎனக்கு முதல்வர் பதவி வேண்டாம்!ஓபிஎஸ் அதிரடி முடிவு!