மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இளம் பெண்!! அங்கு அவருக்கு நேர்ந்த துயரத்தால் தற்போதைய நிலை!!
ஹைதராபாத்தில் இருந்து முதுகலை படிப்பு படிப்பதற்காக சென்ற பெண் தற்போது பிச்சை எடுக்கும் சூழ்நிலையில் இருப்பதால் உதவுமாறு தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் மவுலா அலி என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார்.
இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக அவரது தாயார் சைய்டா வாகஜ் பாத்திமாவால் தனது மகளை தொடர்பு கொள்ள இயலவில்லை. இதனால் அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் பாத்திமாவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தகவல் செய்தி தெரிய வந்தது. அவருக்கு போன் செய்து பேசிய 2 ஐதராபாத் இளைஞர்கள் பாத்திமாவிடம் உங்களது மகள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாகவும், அவரது உடைமைகளை யாரோ திருடி சென்று விட்டதால் உணவு வாங்க கூட பணம் இல்லாமல் அவர் சிகாகோ நகர தெருக்களில் சுற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாத்திமா மத்திய வெளி விவகாரத்துறை மந்திரியான ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் சாப்பிட கூட பணம் இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலையில் சுற்றி வரும் தனது மகளை மீட்டு கொண்டு வருமாறு தெரிவித்து இருந்தார். இந்த செய்தியை பாரத் ராஷ்டிர சமிதி தலைவர் காலீகுர் ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
மேற்படிப்பு படிக்கப் போன பெண் பிச்சை எடுப்பதாக வெளிவந்த செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.