பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!!

0
237
#image_title

பாஜக – வை கவிழ்க திமுக போட்ட அதிரடி வழக்கு!! 4 மாதங்கள் கழித்து ஆளும் கட்சிக்கு ஒளித்த நியான உதயம்!!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் எந்த அளவிற்கு இல்லாத இயற்கை சீற்றத்தை மிக்ஜாம் புயலால் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் சந்திக்க நேரிட்டது.அதுமட்டுமின்றி தூத்துக்குடி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.அவ்வாறு பாதிக்கப்பட்ட பல மக்கள்  வாழ்வாதாரம் எதுவும் இன்றி மிகவும் சிரமப்பட்டனர்.அதிலிருந்து அவர்களை மீட்க தமிழக அரசானது குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு தலா 6000 என்ற அறிவிப்பை வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த நிவாரணத் தொகையையும் வழங்கியது.அதேபோல குடும்ப அட்டை இல்லாதவர்கள் தங்கள் பாதிப்பை குறித்து தெரிவித்து தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தது.ஆனால் இந்த நிவாரணத் தொகையானது அவர்கள் சந்தித்த பாதிப்பிற்கு ஈடாகாது.அதனால் தமிழக அரசானது மத்திய அரசிடம் நிவாரணம் வழங்க கோரி வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

ஆனால் மத்திய அரசோ இது குறித்து தற்பொழுது வரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.கடந்த நான்கு மாத காலமாக இது குறித்து வாய் திறக்காத ஆளும் கட்சியானது தற்போது தேர்தல் வருவதையொட்டி மீண்டும் இந்த நிவாரண தொகையை குறித்து பேச ஆரம்பித்துள்ளது.அதனையொட்டி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற பொழுது பிரச்சாரத்தில் இது குறித்த ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், காஞ்சிபுரம், சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தும் தற்பொழுது வரை நிவாரணத் தொகை அளிப்பது குறித்து மத்திய அரசு சார்பாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.தற்பொழுது வரை நிவாரணம் என்று ஒரு ரூபாய் கூட தமிழகத்திற்கு வரவில்லை.

இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமிடம் கேட்டால், பிச்சை என்று ஏளனமாக பேசுகின்றனர்.அதனால் பேரிடருக்கு முறையான நிதி வழங்காததால் மத்திய அரசு மீது வழக்கு தொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.அந்தவகையில்  இரண்டு பேரிடர்களை மக்கள் சந்தித்து இருப்பதால் பெரும்பாலானோர் வாழ்வாதாரமானது தற்பொழுது வரை பழைய சூழலுக்கு திரும்பாமல் உள்ளது.

எனவே மத்திய அரசாணது நிவாரணத் தொகையாக தமிழகத்திற்கு 2000 கோடியை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.நான்கு மாதங்கள் கழித்து திமுக தற்பொழுது தேர்தல் நடக்கும் நேரத்தில் இவ்வாறான வழக்குகளை போட்டு தங்கள் பக்கம் ஓட்டுக்களை கவர பல்வேறு முன் நடவடிக்கைகளை செய்து வருகிறது என அரசியல் சுற்று வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Previous articleGOLD RATE: மீண்டும் உயர்ந்தது தங்கம்!! இன்று அதன் விலை நிலவரம்!!
Next articleஊழல்வாதிகளுக்கு வலுவான தாக்குதல்… பிரதமரை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்!!