தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!!

0
280
#image_title

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!! மீறினால் 5 லட்சம் அபராதம் ஐந்து ஆண்டு சிறை!!

இன்றைய காலக்கட்டத்தில் நாம் விண்வெளியை ஆராயும் தொழில் நுட்பங்களை கண்டறிந்து கொண்டு வருகிறோம். இவ்வாறு முன்னேற்ற  பாதையில் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டில் கழிவு நீரை சுத்தம் செய்ய மனிதர்களை பயன் படுத்துகிறோம். இந்த அவலநிலை எப்பொழுது நம் நாட்டை விட்டு நீங்கும் என்பது தெரியவில்லை.

பாதாள சாக்கடை, கழிவு நீர் தொட்டி சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கு மனிதர்களை பயன் படுத்துதல் மிகவும் கொடுமையான செயலாகும். இவற்றின் மூலம் விஷவாயு தாக்கி பலர் உயிரிழக்கின்றனர். இதற்கு கட்டாயம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

அனாலும் இப்பொழுது வரையிலும் இந்த மலக்குழி மரணங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற சம்பவங்களை கண்டு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.

இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் விரைவில் மேற்கொண்டால் மட்டுமே பல உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

இதனை குறித்து பல பொதுநல வழக்குகளும் தொடங்கப்பட்டது. இதனையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதிக்கு முன் விசாரணை நடந்த போது உயிரிழப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க பட்டாலும் இதனை தடுக்க அரசாங்கம் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின் படி கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை  உத்தரவிட்டதன் படி எந்த ஒரு தனியார் நிறுவனமோ, தனி நபரோ கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது.

அதனை மீறி மனிதர்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்படும்.அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅடுத்தடுத்து  ஏற்பட்ட  தொடர் நிலநடுக்கங்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் !! 
Next articleஇனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!