ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

Photo of author

By Jayachithra

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் காலமானார்!! திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

மோலிவுட்டின் பிரபல மலையாள நடிகர் கே.டி.சுப்ரமணியம் படன்னாயில் இன்று காலமானார். மேலும் அவருக்கு வயது 88 ஆகும். 19ஆம் தேதி எர்ணாகுளத்தில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் படன்னாயில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு அவர் காலமானார். இந்த தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு இருக்கின்றது. மேலும் இவர் நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி,1956 ஆம் ஆண்டில் விவாஹா டல்லால் என்ற நாடகத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கநாசேரி கீதா, வைகோம் மாளவிகா, கொல்லம் டுனா மற்றும் ஆட்டிங்கல் பத்மஸ்ரீ,எடைகொச்சி சர்காசேதானா போன்ற முன்னணி நாடகக்குழுவுடன் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய பெருமை சேர்த்தார்.

மேலும் இவர் ராஜசேனன் இயக்கிய திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக புகழ் பெற்றார். மேலும் 90 களில் வெளியான பல படங்களில் இவர் நடித்திருந்தார். ஹிட் படங்களான ஜெயராம் நடித்த அதே கண்மணி மற்றும்
அனியன் பாவா மற்றும் சேட்டன் பாவா போன்ற படங்களிலும் மறக்க முடியாத வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

இது 1995 இல் வெளியிடப்பட்டது. அமர் அக்பர் அண்டனி மற்றும் ரேக்ஷ்திர்கரி பைஜூ ஒப்பு போன்ற பல படங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், இவருக்கு ரமணி என்ற மனைவியும் ஸ்வப்னா,சன்னன்,சியாம் மற்றும் சஜன் எனறு குழந்தைகளும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.