மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு ! வைரலாகும் போஸ்டர்!

0
238

தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிம்பு தனது இரண்டாம் கட்ட இன்னிங்சை கோலிவுட்டில் தொடங்கியுள்ளார். இவர் ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி தனது மார்க்கெட்டை தானே வீழ்த்தியுள்ளார். அதாவது காதல் வலையில் சிக்கியது, பிறகு தாமதமாக வருவது போன்று பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இந்த காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் எந்த பட வாய்ப்பும் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தனித்து இருந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடையும் கூடியது.

இந்நிலையில் இவர் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக ரீஎன்ட்ரி கொடுத்தார். படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. செக்க சிவந்த வானம், சமீபத்தில் வெளியான ஈஸ்வரன் போன்ற படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இவர் சர்ச்சைகளை விட்டு விலகி இருந்தாலும் சர்ச்சை இவரை விட்டு ஒதுங்கவில்லை எனக் கூறலாம். அவ்வகையில் இவருடைய ரசிகர்கள் இவரை சர்ச்சையில் சிக்கும் படியான போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக்கப்பட உள்ளது. விராட் கோலி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் சிம்புவின் ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கருத்து பகிர்வதோடு மட்டுமல்லாமல் சிம்பு அவர்களின் முகத்தை போட்டோஷாப் செய்து விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது போன்ற போஸ்ட்டரையும் உருவாக்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் இதனை அவர்கள் வைரலாக்கி வருகின்றனர். இறுதியில் சிம்பு அவர்கள் மீண்டும் சர்ச்சையில் அவரது ரசிகர்கள் மூலமாகவே சிக்கிக் கொள்வார் என பலதரப்பட்ட மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Previous articleஅந்த நடிகரின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தனுஷ் !
Next articleதாயுடன் ஆடிய சீரியல் நடிகையின் காணொளி ! குவியும் லைக்ஸ் !