நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

0
87
#image_title

நடிகர் சியான் விக்ரம் நடிக்கும் 62வது படம்! எதிர்பார்க்காத அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

நடிகர் சியின் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு நேற்று(அக்டோபர்28) மாலை வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

நடிகர் சியான் விக்ரம் தற்பொழுது இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆனது. துருவ நட்சத்திரம் திரைப்படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

மேலும் நடிகர் சியான் விக்ரம் இயக்குநர் ப.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படம் 2024ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது. அது மட்டுமில்லாமல் தங்கலான் திரைப்படத்தின் டீசர் நவம்பர் 1ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சியான் விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படமான சியான்62 திரைப்படம் பற்றிய அறிவிப்பு மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று நேற்று(அக்டோபர்28) வெளியிடப்பட்டது. ஆனால் அறிவித்தப்படி சியான்62 திரைப்படத்தின் அறிவிப்பு 6 மணிக்கு வெளியாகவில்லை. சிறிது நேரம் கழிந்துதான் சியான் 62 திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானது.

அந்த அறிவிப்பின்படி நடிகர் சியின் விக்ரம் நடிக்கும் 62வது படமான சியான்62 திரைப்படத்தை இயக்குநர் எஸ்.யு அருண்குமார் அவர்கள் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைக்கவுள்ளார். இயக்குநர் எஸ்.யு அருண்குமார் அவர்கள் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.