சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான்! இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து!!

0
33
#image_title

சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான்! இரண்டாவது வெற்றியை பெற்ற நெதர்லாந்து!!

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர் பால் வான் மீக்ரான் சிறப்பாக பந்துவீசியதால் நெதர்லாந்து அணி வங்கதேசத்தை வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

நடப்பு உலகக் கோப்பை தேரில் நேற்று(அக்டேபர் 28) நடைபெற்ற 28வது லீக் சுற்றில் நெதர்லாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து 68 ரன்கள் சேர்த்தார். பர்ரேசி 41 ரன்களும் சைபிரன்ட் எங்கில்பிரச்ட் 35 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணியில் பந்துவீச்சில் முஸ்பிசூர், மஹெடி ஹசன், டஸ்கின் அஹ்மத், சோரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டையும், ஷாகிப் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 230 ரன்களை இலக்காகக் கொண்டு வங்கதேச அணி களமிறங்கியது. ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக வங்கதேச அணியின் தொடங்கியது வீரர் லிட்டன் தாஸ், டன்சித் ஹாசன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க வங்கதேச அணி 19 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் ஒரு புறம் ரன்கள் எடுக்க மற்றொரு புறம் விக்கெட்டுகள் விழத் தொடங்கியது. வங்கதேச அணி 70 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் அடுத்த 70 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்கதேச அணி 42.2 ஓவர்களின் முடிவில் 142 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் வங்கதேச அணி இழந்ததால் நேற்றைய(அக்டோபர்28) போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மெஹிடி ஹசன் மிராஸ் 35 ரன்களும், ஷேரிபுல் இஸ்லாம், மஹ்முதுல்லா தலா 20 ரன்களும் எடுத்தனர்.

நெதர்லாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய பால் வான் மீக்ரான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாஸ் டி லீடே அவர்கள் 2 விக்கெட்டுகளையும், காலின் அக்கர்மேன், லோகன் வான் பீக், ஆர்யன் டட் ஆகியேர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மூலம் நெதர்லாந்து அணி உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலமாக நெதர்லாந்து அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.