படிப்பவர்களை போல நடிப்பவர்களும் அரசியலுக்கு வர வேண்டும்! நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து ஆளுநர் தமிழிசை பேட்டி!

0
342
#image_title

படிப்பவர்களை போல நடிப்பவர்களும் அரசியலுக்கு வர வேண்டும்! நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து ஆளுநர் தமிழிசை பேட்டி!

படிப்பவர்களை போல திரையில் நடித்துக் கொண்டிருப்பவர்களும் அதிகம் பேர் அரசியலுக்கு வர வேண்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்கள் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் அறிவிப்பு பற்றி பேசியுள்ளார்.

திரைத்துறையில் உட்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் அவர்கள் தமது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக நேற்று(பிப்ரவரி2) அறிவித்தார். தான். தொடங்கவிருக்கும் கட்சிக்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு நலத்திட்டங்களை செய்யப் போவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இருப்பினும் ரசிகர்கள் ஒருபுறம் நடிகர் விஜய் அவர்கள் சினிமாவில் இனி நடிக்க மாட்டார் என்பதை நினைத்து சோகத்தில் உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் “நடிகர் விஜய் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கியதை நான் முழு மனதாக வரவேற்கின்றேன். இவரைப் போல இன்னும் அதிகமான நபர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

நான் எந்த கல்லூரிக்கு சென்றாலும் எந்த கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்டாலும் படிப்பவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் கூறுவேன். அதே போல திரையில் நடிப்பவர்களும் அதிகம் பேர் அரசியலுக்கு வர வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு அதிகமான தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தலைவர்களாக இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அதிகமாக இளைய தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்ததை நான் பாராட்டுகின்றேன். இன்னும் நிறைய பேர் வரவேண்டும்” என்று கூறினார்.

Previous articleதமிழ் ‘வேரியன்ட்’ கலைஞன்! – சிம்பு பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு!!
Next articleஸ்வீட் நியூஸ்.. தங்கம் விலை சரசரவென்று குறைந்தது..!