அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

Photo of author

By Divya

அடேங்கப்பா.. உணவில் நாம் சேர்க்கும் மஞ்சளில் இத்தனை நன்மைகள் அடங்கி இருக்கா?

இந்தியர்களின் உணவில் மஞ்சள் பயன்பாடு அதிகம் இருக்கும்.இந்த மஞ்சளை உணவில் சேர்க்க அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் தான் காரணம்.இயற்கை கிருமி நாசினி என்று அழைக்கப்படும் மஞ்சள் நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மஞ்சளில் ‘குர்க்குமின்’ என்ற வேதிப்பொருள் நிறைந்து இருக்கிறது.இவை சளி,இருமல்,ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய சிறந்த ஒன்றாக இருக்கிறது.அதுமட்டும் இன்றி இதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள்,ஆன்டி- ஏஜிங் உள்ளிட்டவை நிறைந்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த ஒன்றாக இருக்கிறது.

மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள்:-

*மஞ்சளில் நிறைந்துள்ள குர்க்குமின் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.அதேபோல் இரத்த அழுத்தம்,இரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட பாதிப்பை குணப்படுத்த மஞ்சள் பெரிதும் உதவுகிறது.

*சளி தொந்தரவு இருப்பவர்கள் 1 டம்ளர் கொதிக்கும் பாலில் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து காய்ச்சி குடித்தால் விரைவில் சளி தொல்லை நீங்கும்.அதுமட்டுமின்றி வயிறு எரிச்சல்,வாய்ப்புண்,தொண்டை எரிச்சல் உள்ளிட்டவையும் சரியாகும்.

*ஒரு பாத்திரத்தில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.பின்னர் அதை ஒரு டம்ளருக்கு மாற்றி வாயை கொப்பளித்தால் நாள்பட்ட தொண்டைப்புண் ஆறும்.அதோடு தொண்டை சளியும் வெளியேறி விடும்.

*அம்மை கொப்புளங்கள் மற்றும் சேற்றுப்புண் இருபவர்கள் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலையை சம அளவு எடுத்து மைய்ய அரைத்து கொப்புளங்கள் மற்றும் புண்கள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் அவை விரைவில் குணமாகும்.

*சூடான பாலில் மஞ்சள் கலந்து பருகி வந்தோம் என்றால் முடக்கு வாத வீக்கம்,கீழ் வாதம் உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும்.

*அதேபோல் வெறும் வயிற்றில் மஞ்சள் + சூடான பால் பருகுவதால் சிறுகுடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் இருக்கும்.மஞ்சளில் அதிக நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால் அவை உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளித்தரும்.வயிறையும் சுத்தம் செய்வதில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

*அதேபோல் கஸ்தூரி மஞ்சள் சரும பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.இதை முகத்திற்கு பயன்படுத்துவதால் முகம் பொலிவாகவும்,சுருக்கங்கள் இன்றியும் காணப்படும்.