திமுகவில் இணைந்தார் ! அதிமுக வின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் !

0
94

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய வி.எஸ்.விஜய் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

வேலூர் மாவட்டத்தை சார்ந்த இவர் 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார் அப்போது திடீரென அமைசசர் பதவி பறிக்கப்பட்டது மேலும் வேலூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது இதன் பின் எந்தவொரு பதவியும் வகிக்காமல் இருந்த இவருக்கு ஜெயலலிதா இறப்பிற்கு பின் அதிமுக வின் மருத்துவ அணியின் மாநில இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில் வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்தாகவும் ஆனால் அப்பதவி கே.சி.வீரமணியின் ஆதரவாளரான எஸ்.ஆர்.கே.அப்புக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தியில் இருந்தகாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இது அதிமுக வட்டாரத்தில் ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇந்தியா – இங்கிலாந்து தொடரை நாங்கள் நடத்த தயார்
Next articleபரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே கப்பலை விட்டு சென்ற பயணிகள்